LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

மூச்சு கணக்கின்படி ஆயுட்காலத்தை கணக்கிடுவது எப்படி – சித்தர்கள் கூற்று!

From: 'Medicine of India'

avatar

Medicine of India
avatar

Medicine of India

Posts : 234

Points : 663

Join date : 2015-09-14


Developer

ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனது ஆயுட்காலம் முடியும் போது அவனது வயது என்னவாக இருக்கும் என்று உங்களால் கணிக்க முடியுமா? முடியும் என்கிறது சித்தர்களின் கூற்று. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதிக்கப்பட்ட வயதானது 100 ஆண்டுகள்.

21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60 நிமிடம் x 24 மணி நேரம் =1440) மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதனின் மூச்சு கணக்கை வைத்து அவனது வாழ்நாளை கணிக்க முடியுமாம்…,

இவ்வாறான தகவல் பல இணையங்கள், மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த அளவு உண்மை, பொய் இருக்கிறது என்று தெரியவில்லை….

15 மூச்சு
100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளார்.

16 மூச்சு
93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளார்,

17 மூச்சு
87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளார்,

18 மூச்சு
80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளார்,

19 மூச்சு
73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளார்,

20 மூச்சு
66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளார்,

7 வருடம் ஆயுள் குறைகிறது
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு அதிகரிக்கும் போதும், நமது ஆயுளில் 7 வருடங்கள் குறைகிறது என்று இதில் கூறப்பட்டுள்ளது.

இதுவும் சத்தியமா??
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு, 1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு மற்றும் “0 “முறை சுவாசித்தால் முடிவேயில்லை .இது சித்தர்களால் மட்டுமே முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அறிவியலா? சித்தர் ரகசியமா?? புரளியா??
அறிவியல் வளர்ந்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் சமூக வலைத்தளங்களில், இணையங்களில் இவ்வாறான செய்திகள் அதிகம் உலா வருகின்றன. இவை எந்த அளவு உண்மை, பொய் என்று கணிப்பது சிரமமாகவே இருக்கிறது. மற்றும் இந்த கணக்கு முறைக்கு முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் எங்கும் தரப்படவில்லை.

யோகா பயிற்சி
சிலர் பிராணயாமம் மூலம் இது சத்தியம் என்றும் கூறுகிறார்கள்.
POSTED: 8/10/2015, 12:01 amPOST 1

கருத்தை எழுத உள்நுழையவும்.

You cannot reply to topics in this forum