LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

தண்ணீர் விட்டான் கிழங்கு

From: 'Medicine of India'

avatar

Medicine of India
avatar

Medicine of India

Posts : 234

Points : 663

Join date : 2015-09-14


Developer

அல்லி குடும்ப(Lilliaceae) தாவரமான தண்ணீர் விட்டான் கிழங்கின் அறிவியல் பெயர் அஸ்பாரகஸ் ரெசிமோசஸ்(Asparagus Recemouses ) என்பதாகும் வேலிகளில் படர்ந்து வளரும் இலைகள் முட்களாகவும் நுனி கிளைகளே இலைகளாகவும் உருமாறியுள்ளன முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்டவை , வேர்கிழங்குகள் சதைப்பற்றும் அதிக நீர்தன்மையும் கொண்டவை .வேர்கிழங்குகள் மூலமாகவும் , விதைகள் மூலமாகவும் இனப்பெருக்கம் அடைகின்றன நிலத்தடியில் கொத்து அவரைக்காய்கள் போல வேர்கள் காணாப்படுகிறது வடமொழியில் சதாவரி என்று அழைக்கப்படுகிறது

சித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே அனைத்து நோய்களையும் போக்கும் சர்வரோக நிவாரணிகளை கண்டு பிடிப்பதில் தான் சித்தர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதிகளை பயன்படுத்தினர் . ஆண்மையை அதிகரிக்கச்செய்வதோடு சர்வரோக நிவாரணியாக அனைத்து நோய்களையும் தீர்க்கும் தண்ணீர் விட்டன் கிழங்கின் மகத்துவம் நம்முடைய சித்தர்கள் மட்டுமல்ல வடநாட்டு ஞானிகளும் அறிந்துள்ளனர்

தண்ணீர் விட்டான் கிழங்கின் இரசாயன அமைப்பு
தண்ணீர் விட்டான் கிழங்கின் மருத்துவ குணத்திற்கு காரணன் அவற்றில் காணாப்படும் பாலிபீனல் மூலப்பொருள்களும் அசபராஜின் என்ற நைட்ரஜன் காரப்பொருளும் தான்.

மருத்துவ குணங்கள்:

பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுபடுத்துகிறது தாய்பால் சுரத்தலை அதிகப்படுத்துகிறது உடலினை உறுதியாக்கி ஆண்மையை அதிகரிக்கசெய்கிறது, உடல் உள்ளுருப்புகளின் புண்களை ஆற்றுகிறது முக்கியமாக அல்சர் எனப்படும் வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்து தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும் . பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி இருப்பதால் தண்ணீர்விட்டாண் கிழங்கை வடநாட்டு ஞானிகள் நூறு நோய்களின் மருந்து எனப்பொருள்படும் சதாவரி (சதா= நூறு , வரி = நோய்களின் மருந்து ) என பெயரிட்டுள்ளனர்.

அழகுதாவரம் தண்ணீர்விட்டன் கிழங்கு:

தண்ணீர் விட்டான் கிழங்கின் வெண்மை நிற பூக்கள் மிகவும் வசீகரமானவை சில சிற்றினங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வீட்டிலும் பூங்கவிலும் அழகிற்காக வளர்க்கப்படுகிறது அழகிற்காக வளர்கப்படும் சிற்றினங்களில் வேர்கள் பெரியதாக காணப்படுவது இல்லை

தண்ணீர் விட்டான் கிழங்கு:

ஆரோக்கிய பானம் தயாரிப்பு: நான் கூறப்போகும் ஆரோக்கிய பானம் தயாரிப்பு முறை இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட இந்திய மருத்துவ முறைகள் என்னும் நூலினில் இருந்து எடுக்கப்பட்டதாகும்
பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளை தோல் நீக்கி இடித்து சாறு எடுக்க வேண்டும் ஒரு கோப்பை சாறுடன் ஒரு தேக்கரண்டி சர்கரை கலந்து காலையில் பருக வேண்டும் இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும் தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும்.
POSTED: 15/9/2015, 4:06 pmPOST 1
avatar

Medicine of India
avatar

Medicine of India

Posts : 234

Points : 663

Join date : 2015-09-14


Developer

பெண்களின் பெரும்பான்மையான நோய்க்கு தீர்வாகும் -sathavaree grutham -சதாவரீ க்ருதம்

1. தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறு – ஸதாவரீரஸ (அ) கஷாய         3.200 கி.கிராம்
2. நெருஞ்சில் கஷாயம் – கோக்ஷுர ஸ்வரஸ (அ) கஷாய         3.200       “
3. பசுவின் நெய் – க்ருத                                  1.600       “
4. பசுவின் பால் – கோக்ஷீர                               3.200        “

இவைகளை ஒன்று கலந்து அதில்

1. பால்முதுக்கன் கிழங்கு – விடாரீ                        12.500 கிராம்
2. சந்தனம் – சந்தன                                12.500       “
3. மூங்கிலுப்பு – வம்சலோசன12.500       “
4. திராக்ஷை – த்ராக்ஷா                                   12.500       “
5. அதிமதுரம் – யஷ்டீ                                    12.500       “
6. கோரைக்கிழங்கு – முஸ்தா                             12.500       “
7. வெள்ளரி விதை – த்ரபுஸ பீஜ                               12.500       “
8. ஏலக்காய் – ஏலா                                 12.500       “
9. சுத்திசெய்த கோமூத்திர சிலாஜது – ஷோதித கோமூத்ர ஷிலாஜித்           12.500       “
10. திப்பிலி – பிப்பலீ                                 12.500       “
11. ஆம்பல் கிழங்கு – உத்பலகந்த                       12.500       “
12. ஓரிலைத் தாமரை – பத்மசாரிணி                       12.500       “
13. மீனாங்கண்ணி – மீனாக்ஷி                              12.500       “
14. கோரைக்கிழங்கு – முஸ்தா                             12.500       “
15. காகோலீ – காகோலீ                                   12.500       “
16. க்ஷீரகாகோலீ – க்ஷீரகாகோலீ                         12.500       “
17. ஜீவகம் – ஜீவக                                      12.500       “
18. ருஷபகம் – ருஷபக                                    12.500       “
19. காட்டுளுந்துவேர் – மாஷபர்ணீ                          12.500       “
20. காட்டுப்பயிறு வேர் – முட்க பர்ணீ                       12.500       “
21. மேதா – மேதா                                        12.500       “
22. மஹா மேதா – மஹா மேதா                           12.500       “
23. சீந்தில்கொடி – குடூசி                                   12.500       “
24. கர்க்கடக சிருங்கி – கர்க்கட ச்ருங்கி                           12.500       “
25. கூகை நீறு – துகக்ஷீர                                  12.500       “
26. பதிமுகம் – பத்மக                                     12.500       “
27. நாமக்கரும்பு – காண இக்க்ஷூ                          12.500       “
28. ருத்தி – ருத்தி                                         12.500       “
29. விருத்தி – விருத்தி                                    12.500       “
30. திராக்ஷை – த்ராக்ஷா                                   12.500       “
31. கீரைப்பாலை – ஜீவந்தி                               12.500       “
32. அதிமதுரம் – யஷ்டீ                                    12.500       “

இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும். ஆறியபின் அதில் பொடித்துச் சலித்த சர்க்கரை (ஸர்க்கர) 400 கிராம், தேன் (மது) 800 கிராம் இவைகளைக் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்: 5 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
POSTED: 15/9/2015, 4:11 pmPOST 2

கருத்தை எழுத உள்நுழையவும்.

You cannot reply to topics in this forum